பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பது சிறீலங்காவுக்கு அமெரிக்கா பயிற்சி

422 0

OLYMPUS DIGITAL CAMERA

பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுப்பது தொடர்பாக சிறீலங்காவின் பாதுகாப்பு மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு அமெரிக்கா பயிற்சிகளை அழித்துள்ளது.கடந்த 13 ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதி வரை கொழும்பில் இது குறித்துப் பயிற்சியளிக்கும் கருத்தரங்கொன்று நடைபெற்றது. இக் கருத்தரங்கில் சிறீலங்கா கடலோரக் காவற்படை, காவல்துறை கடலோரக் காவற்படை, துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவர்களுக்கு, அனைத்துலக பேரழிவு ஆயுதங்களின் பரவலைத் தடுக்கும் திட்டத்தைச் சேர்ந்த, அமெரிக்க இராணுவ நிபுணர்கள்- எல்லைப் பாதுகாப்பு, தொழில்நுட்பம், அச்சுறுத்தல் மதிப்பீடு போன்ற தொனிப்பொருள்களில் விளக்கங்களை அளித்தனர். இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா – சிறீலங்கா ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டத்தின்கீழ் இந்தப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment