எனது உயிரைப் பாதுகாப்பதற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குக – கோத்தபாய

436 0

z_p20-Youth-09தனது உயிரைப் பாதுகாப்பதற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குமாறு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ சிறீலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், குறிப்பிட்ட தரப்பினரால் தனக்கு தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படும் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.எனவே எனக்குப் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட இராணுவத்தினரை நீக்கி காவல்துறையினரை பணிக்கு ஈடுபடுத்தவேண்டாம் என பாதுகாப்புச் செயலாளரைக் கேட்டுக்கொள்கின்றேன்.

என்மீது குண்டுத் தாக்குதல் நடாத்தியவர்களை மன்னிப்பதற்கு நான் தயாராக இல்லை என அப்பட்டமான பொய்யொன்றையும் கூறியுள்ளார்.சிங்கள மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காக தன்மீது தானே தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடாத்தியதாகவும் எவ்வாறு அது நடாத்தப்பட்டது எனவும் அண்மையில் புலனாய்வுத் தகவல்கள்  வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அதற்கு ஒரு புலனாய்வாளரின் உயிரும் பறிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இவர் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடாத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் நான்கு  தமிழ் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  நான்கு கைதிகளையும், பொதுமன்னிப்பில் விடுதலை செய்வது அரசாங்கத்தின் வேலை. ஆனால் அவர்களை மன்னிக்க நான் தயாரில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment