புதியசட்டம் ஆபத்தானது!

206 0

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாறான புதிய சட்டம் ஊடக செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையுமென தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ், தகவல் பரிமாற்றமும் இச்சட்த்துக்கமைய பயங்கரவாத செயலாக கருதப்படும் என்றார்.

எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்று (26) சந்தித்த போதே ஜீ.எல்.பீரிஸ், இவ்வாறு எடுத்துரைத்துள்ளார்.

இதன்போது பயங்கரவாதச் தடுப்புச் சட்டத்துக்கு மாறாக கொண்டுபவரப்படவுள்ள புதிய சட்டத்தில் மறைமுகாக குறிப்பிடப்பட்டுள்ள காரணிகளை முன்னாள் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் ஊடகப் பிரதானிகளுக்கு  எடுத்துரைத்தார். 

தொடர்ந்துரைத்த அவர், இச்சட்டத்தின் மூலம் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளையும் முடக்கும் முயற்சிகள் இடம்பெறுவதாகவும், ஒருவரிடமிருந்து தகவல் பெற்று அவற்றை மற்றவர்களுக்கு வழங்குவது இச்சட்த்தின் பிரகாரம் பயங்கரவாதத்துக்கு துணைபோகும் செயலென கருதப்படுவதாகவும் தெரிவித்த அவர், தற்கால ஊடகச் செயற்பாடுகளையும் இச்சட்டத்தின் பிரகாரம் பயங்கரவாத செயற்பாடுகளாக காண்பிக்க முடியுமெனவும் தெரிவித்துள்ளார்