தமிழ்த் தரப்பினர் மாற்றுத் தளத்தைக் கையாள வேண்டும்-சுரேஸ்(காணொளி)

345 0

ஐ.நா.வினது பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில்லாத நிலையில், தமிழ்த் தரப்பினர் மாற்றுத் தளத்தைக் கையாள வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப் தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையை ஆட்சி செய்யும் பெரும்பான்மைத் தரப்புக்கள் எதுவுமே ஈழத்தமிழர்களுக்கான தீர்வுகளைத் தரப்போவதில்லை.

அதற்கான முயற்சிகளையும் முன்னெடுக்கப் போவதுமில்லை. தமிழர்கள் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழர் தரப்பு ஒற்றுமையுடன் தீர்க்கமான முடிவுகளை முன்னெடுக்கவேண்டும். இனப்பிரச்சினை குறித்த தீர்விற்கான அடுத்த தளத்திற்குச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் இலங்கையில் அடுத்துவரும் அரசாங்கம் இனியும் தமிழர்களின் விடயத்தில் தீர்வுகளை முன்வைக்குமென நாம் எதிர்பார்க்க முடியாது. இவ்விடயம் எமக்குக் கடந்த காலங்களில் தெளிவாகத் தெரிந்திருந்தது” என ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.