நிர்ணயிக்கப்பட்ட கால வரையறைக்குள் போருக்குப் பிந்திய நிலைமாறுகால நீதிச்செயற்பாட்டிற்காக விரிவானதும், தெளிவானதுமான தந்திரோபாயத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் இன்று அழைப்பு விடுத்தார்.
இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அடுத்த முக்கியமான கட்டமாக சுயாதீனமான உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை நிறுவுவதற்கான சட்டத்தை உருவர்ககுதல் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜெனீவா ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை, இன்று சமர்ப்பித்து தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்…..
இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகள் தொடர்பாக கலந்தாய்வு செய்வதற்காகக் கிடைத்த இச்சந்தர்ப்பத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
அத்துடன் மனித உரிமைகள் ஆணையகத்தின் 30/1 மற்றும் 34/1 ஆகிய கடந்த கால தீர்மானங்களைத் தொடர்ந்து என்னுடைய இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கிறேன்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் அலுவலகம் முன்கூட்டியே இந்த அறிக்கையை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பி இருந்தது.
இலங்கை அரசாங்கத்தின் பொருத்தமான அறிக்கை பற்றி குறிப்புக்களைப் பெறுவதற்கும், போதிய பரிசீலனைக்காகக அவற்றைக் கொடுப்பதற்கும் மற்றும் எமது வழமையான படிமுறைகளுக்கு இணங்கவும் அது செய்யப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தினுடைய பரஸ்பரத் தொடர்பாடலும், நீடித்து நிலைக்கக்கூடிய ஒத்துழைப்பும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு கிடைக்கின்றது என்பதை இந்த அறிக்கை ஏற்றுக்கொள்கின்றது.
30/1 மற்றும் 34/1 ஆகிய முன்னைய தீர்மானங்களை இலங்கை அமுல்படுத்துவதற்காக ஐ.நாவின் சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கான நிதியத்தினூடாகவும், மற்றும் வேறு வழிகளிலும் இலங்கை அரசாங்கத்திற்கு நாங்கள் தொழில்நுட்ப ஆதரவை வழங்கி வருகிறோம். ஐஃநா வதிவிட பிரதிநிதி மற்றும் அவருடைய மனித உரிமைகளுக்கான சிரேஸ்ட ஆலோசகர் ஆகியோருடன் நெருங்கிப் பணியாற்றுவதனூடாக இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆரம்ப நிலைகளில் தாமதங்கள் காணப்பட்டிருந்தாலும், காணாமல் போனோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டு செயற்படத் தொடங்கியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்.
வலிந்து காணமல் போதல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் மிகவும் கஸ்டமான நிலைமைகளை அணுகுவதன் மூலமாக குறிப்பாக பாரபட்சமற்க குறிக்கோள்களுடன் அணுகுவதன் மூலமாக, காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது? எங்கே இருந்தார்கள் என்பன போன்ற மிகச் சிக்கலான செயற்பாடுகளைப் பொறுப்பெடுப்பதற்கு காணாமல் போனோர் அலுவலகம் திட்டமிடுகிறது.
அத்துடன் இழப்பீடுகளுக்கான அலுவலகம் நிறுவப்படுவதையும் நான் பாராட்டுகிறேன். இழப்பீடுகளுக்கான அலுவலகத்திற்கு விரைந்து ஆணையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தின் இந்த இரண்டு நிறுவனங்களும் பயனுறுதியுடனும், சுயாதீனமாகவம் செயற்படக்கூடிய அத்தனை ஆதரவுகளையும், உதவிகளையும் வழங்கும்.
நீதி, உண்மையான பொறுப்புக் கூறுதல், உண்மையைத் தேடியறிதல் ஆனியவற்றை இலக்குவைத்து பரந்த அணுகுமுறையுடன் அவை செயற்படுதற்குமான தொடர்புகளும் மேற்கொள்ளப்படும்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரச படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள காணிகள் விடுவிப்பில் குறிப்பிட்டளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆயினும் மிக முக்கியமான இச்செயற்பாடுகள் பூர்த்தியடைவதற்கு மேலும் படிமுறைகள் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது.
30/1 மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்தை அமுலாக்கியிருக்க வேண்டிய பின்னணியில் 4 வருடங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பரந்தளவிலான நிறுவன ரீதியான சீரமைப்பு நடவடிக்கைகளில், இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பும் ஆதரவும் இருக்க வேண்டியதையே நான் அந்தப் படிமுறைகள் என சுட்டிக்காட்டுகிறேன்.
எவ்வாறாயினும், 30/1 தீர்மானத்தின் அமுலாக்கத்திற்கு மேலும் உறுதியான விரிவான விரைவான செயற்பாடுகள் அவசியமாக இருக்கின்றது.
இலங்கை நாட்டினுடைய உயர் தலைமைகள் மத்தியில் காணப்படுகின்ற பொதுநோக்கு நிலையில் பற்றாக்குறையே தீர்மான அமுலாக்கங்கள் தாமதமாவதற்கு பங்களிக்கும் காரணியாகத் தோன்றுகின்றது.
இவ்வாறான முக்கிய விவகாரங்களில் ஏற்படுகின்ற செயற்பாடின்மையும் தேக்க நிலைமையும், மேலதிகமானதும் தவிர்க்க முடியாததுமான வேறு பிரச்சினைகளையும் ஏற்படுத்துகின்றது.
பல்வேறுபட்ட சமூகங்களினதும், எல்லா இன மற்றும் மதக் குழுக்களினதும் மத்தியிலும் காணப்படுகின்ற பாதிக்கப்பட்டவர்களின்மீது மிகவும் சேதமான விளைவுகளையும்; இது இப்பொழுது ஏற்படுத்துகின்றது.
சர்வதேச மனிதாபினமான சட்டங்களையும் மனித உரிமைச் சட்டங்களையும் மீறும்வகையிலான குற்றச்சாட்டுக்களை ஏற்படுத்தி இருக்கின்ற மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கைப் படையின் சிரேஸ்ட பதவி ஒன்றிற்கு அண்மையில் நியமிக்கப்பட்டமை ஒரு கவலையளிக்கும் மாற்றமாகவும் இருக்கின்றது.
ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் 30/1 மற்றும் 34/1 ஆகிய தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடனானதாக அமைந்திருப்பது
பொறுப்புக்கூறுவதிலும், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிய ஆகியவற்றை மதிப்பதிலும் பலம் மிக்க ஒரு எதிர்காலத்தை கட்டி எழுப்புவதற்கு இறந்த காலத்தை மீள்பார்வையிட வேண்டும் என்ற தேவையை இலங்கை அரசாங்கம் அங்கீகரித்துள்ள என்பதைக் காட்டுகின்றது.
போரினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இலங்கை சமூகங்களுக்கு இந்தத் தேவை தொடர்வது அவசியமானது.
கடந்த காலத்தின் வன் செயல்களையும் மனித உரிமை மீறல்களையும் தவிர்த்து மேலும் முன்னேறுவதற்கான சந்தர்ப்பம் துணிகரமான தீர்மானங்களுக்கு ஊடாகவும் அரசாங்கத்தின் எல்லா மட்டங்களிலான தலைமைகளின் மூலமாகவும் ஆற்றப்பட வேண்டும்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கைமீதான தீர்மானத்தினை, தெளிவான காலவரையறைக்குள் நிறைவேற்ற ஐ.நாவும், சர்வதேச சமூகமும் எவ்வாறு வழிப்படுத்தும் என, இன்றைய அமர்வில் பல்வேறு தரப்பாலும் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்தை அமுல்படுத்துவதில், இலங்கை அரசாங்கம் விரைவற்ற தன்மையே கொண்டுள்ளது நம்புகிறோம். அந்தச் செயற்பாடுகள் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை என நம்புகிறோம்.
ஐ.நா மனித உரிமை ஆணையகத்தின் படிமுறைகளை நிறைவேற்ற இலங்கை துணிகரமான ஊக்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காணமால் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பன அமைக்கப்படுவதனூடான இலங்கை அரசாங்கத்தின் சமாதான முன்னுரிமை திட்டம் அமுலாவதற்கு எனது அலுவலகம் அத்தனை ஆதரவுகளையும், அனுசரணைகளையும் வழங்கும். நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கான பொறிமுறைகளையும், நிலைமாறு கால நீதியை நிலைநிறுத்துவதற்கான பொறிமுறைகளும் நிறுவப்பட வேண்டியுள்ளன.
என்னுடைய அறிக்கையை நீங்கள் பார்த்தீர்களானால் நிலைமாறுகால நீதி குறிப்பிட்ட ஒரு கால வரையறைக்குள் நிறுவப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன். மனித உரிமைகள் ஆணையகத்தில் 30/1 தீர்மானத்தின்படி அமுலாக்காமல் இருக்கும் பல விடயங்களும் எஞ்சியுள்ளன.
அவையும் அமுல்படுத்தப்பட வேண்டும்.
நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகள் சிக்கலானவை. எவ்வாறாயினும் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் உறுதியாக இருக்க வேண்டும். தாமதங்களை இனிமேலும் மேற்கொள்ளக்கூடாது.
இன்னமும் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்களில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்போடும், தெளிவோடும் இருக்கிறது என்பதை போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கும், சர்வதேசத்திற்கும் காட்டுவதற்கு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இவை மேற்கொள்ளப்பட வேண்டும். காலவரையறையில் மிகவும் தெளிவு இருப்பதுடன் சம்மபந்தப்பட்ட எல்லாத்தரப்புக்களுடனும் தொடர்பு பேணப்பட்டு இவை மேற்கொள்ளப்பட வேண்டும்.
சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புக்களுக்குள்ளும் நம்பிக்கையைக் கட்டி எழுப்ப அவர்கள் எல்லோருடனான தொடர்புகளும் அவசியமாகும்.
எனது அலுவலகம் மற்றும் உண்மைகளைக் கண்டறிதல், இழப்பீடுகளை வழங்குதல் ஆகிய விடயங்களுக்கான ஐ.நா விசேட அறிக்கையாளல் அலுவகமும் 2015ஆம் ஆண்டிலிருந்து இந்த விடயங்களை மீள மீள வலியுறுத்தி வருகின்றோம்.
இந்த விடயங்களில் தெளிவான இலக்குகளை அடைவதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையக அலுவலகம் வழிகாட்டல்களை வழங்கத் தயாராக இருக்கிறது.
இவை தொடர்பான கொள்கைகள், சட்டவாக்கங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கான பிரிநிதித்துவம் ஆகியவற்றை எவ்வாறு அடைந்து கொள்வது என்பது தொடர்பிலும் எங்களால் உதவி செய்ய முடியும்.
பாதிக்கப்பட்டவர்களினதும், சாட்சிகளினதும் பாதுகாப்புத் தொடர்பாக எனது அலுவலகம் கரிசனைகளைக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகம் பாதிக்கப்பட்டவர்களினதும், சாட்சிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பொறிமுறைகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எனது அலுவலகம் ஆதரவுகளையும், அனுசரணைகளையும் வழங்கும். நிலைமாறு கால நீதிச் செயற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்களையும் ஆலோசனைகளையும் நம்பிக்கையைப் பலப்படுத்த உதவும்.
இலங்கையில் நடைபெறும் பல்வேறு திட்டங்களினூடான எனது அலுவலகம் சிவில் சமூகத்ததுடனும், போரிலே பாதிக்கப்பட்டவர்களுடனும், பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் இணைந்து இதற்காகச் செயற்படுகிறது.
போரிலே பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளும், பால்நிலை சமத்துடனான நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளும தேசிய மட்டத்திலே மிக முக்கியத்துவமளிக்கப்படக்கூடியவையான இருக்கின்றன….


