இன சமத்துவத்தை பேணுவதில் முக்கிய தடைக்கல் அரசாங்கம்!

310 0

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதானஅவையில் இடம் பெற்றபொது விவாதத்தில் விடயம் 9ல் கலந்து கொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றியஉரை இங்குவருமாறு.

இனவாதத்தைக்களையும் அரசியல் விருப்பு ஸ்ரீலங்காஅரசிடம் இல்லை. கண்டிக லவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களுக்கு நீதிகிடைக்காமைகும் அந்த இனவாதமெ காரணம். ஐ.நாவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை
கூட்டத்தொடர்: 40
விடயம் 9 : பொதுவிவாதம்
உரையாற்றியவர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இனங்களுக்கிடையேயானமுரண்பாட்டைகளைந்து இன சமத்துவத்தைபேணுவதில் முக்கிய தடைக்கற்களாக அரசுகளின் அரசியல் விருப்பின்மையும், இனவாத மனப்பான்மையின் நிலவுகையும், எதிர்மறையான முன்முடிவுகளுமே விளங்குவதா கடர்பன் பிரகடனம் வெளிப்படுத்துகிறது.

கடந்தவருடம் சிறீலங்காவின் மத்தியமாகாணத்தில் முஸ்லிம்களை இலக்குவைத்துநடத்தப்பட் ட இனவாத வன் முறைகளை தொடர்ந்து அதனை விசாரிப்பதற்காக சிறிலங்காமனித உரிமைகள் ஆணைக்குழு 2018 மே 9-12 வரையான காலப்பகுதியில் ஒருவிசாரணையைநடத்தியிருந்தது. அவ்வன்முறைகளால் பாதிக்க்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அந்த ஆணைக் குழுவில் ஆஜராகிதம் கண்களால் கண்டவற்றை சாட்சியமாக் வழங்கியிருந்தனர். அந்த விசாரணையின் முடிவில் குறித்தவிசாரனை அறிக்கையானது 2018 யூலை மாதம் வெளியிடப்படும் என அந்தவிசாரணைக்குழுவின் ஆணையாளார்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அந்த விசாரணை நடைபெற்று பத்துமாதங்கள் ஆனபோதும் அந்தவிசாரணை அறிக்கை இன்னமும் வெளியிடப்படவில்லை என்பதோடு இந்த காலதாமதத்திற்கான காரணமும் இன்னமும் சிறிலங்கா மானித உரிமைகள் ஆணைக்குழுவினரால் வெளிப்படுத்தப்படவில்லை.

அதனால் அந்தவன்முறைகளினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு அப்பால் ஏறத்தாழ 450 இற்கும் அதிகமான சொத்துடமைகள் சேதப்படுத்தப்படாதாக சிறில்னக்காவின் பிரதமரே வெளிப்படையாக ஒப்புக்கொன்டநிலையிலும் ,அவ் வன்முறையினால் பாதிக்கப்பட்டமக்களுக்கானஎந்தவொரு இழப்பீடும் இதுவரைவழங்கப்படவில்லை.

இவ்வன்முறைகள் தொடர்பில் சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு மேலதிகமாக குற்றவியல் தடுப்புப்பிரிவுமற்றும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுஆகியனவும் தனிதனியான விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

விசேடஅதிரடிப்படையினரலால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டு ,ஆயுதங்களை வைத்திருந்ததாக ஒப்புக்கொள்ளுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாகவும், இந்தவன்முறைகளின் போதுகாயப்பட்ட முஸ்லிம்களுக்கு சிகிச்சையளிக்க சில சிங்களவைத்தியர்கள் மறுத்ததாகவும் குற்றம் சாட்டப்படுள்ள நிலையில், பதிவுசெய்யப்பட்டுள்ள அந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில எந்தவொருவிசாரணைகளும் இதுவரைமுன்னெடுக்க்ப்படவில்லை.

ஆக இந்த இனவன்முறைகள் நிக்ழத்தப்ட்டுஒருவருடமாகியும் அதற்கானநீதி இதுவரைவழங்கப்படவில்லை.
இந்தவனுமுறையை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அதேநேரம் பாதிக்கப்பட்டமக்களுக்கானஎந்தவொரு இழப்பீடும் இதுவரைவழங்கப்படவில்லை.

கனம் உபதலைவர் அவர்களே, இதுவே சிறிலங்காவின் இனவாதம் என்பதைதங்களுக்கு வெளிப்படுத்துகின்றேன்