வடக்கு மாகாணத்தில் சித்தி பெற்ற அதிபர்களின் நியமனம் முறைகேடானது

290 0

hhhfhவடக்கு மாகாணத்தில் சித்தி பெற்ற அதிபர்களின் நியமனம் முறைகேடானது என சித்தி பெற்ற அதிபர்கள் இன்று வெள்ளிக் கிழமை முற்பகல் 10.30 மணியளவில் வடமாகாண கல்வித் திணைக்களத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் சித்திபெற்ற அதிபர்களின் பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில்,

போட்டிப் பரீட்சைகளில் 398 அதிபர்கள் சித்தியடைந்திருந்தோம். அதிபர் போட்டி பரீட்சையில் சித்தியடைந்துவிட்டு ஆசிரியர்களாக கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறு இருக்கையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் 90 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

போட்டிப் பரீட்சைகள் நடாத்தப்பட்டு அதிபர் நியமனம் மேற்க்கொள்ளப்படவிருந்தது. ஆயினும் வடக்கு மாகாண முதலமைச்சர் தலையிட்டு நேர்முக பரீட்சையினை நிறுத்திவிட்டு 398 பேருக்கும் ஓரே நேரத்தில் நியமனம் வழங்குமாறு அறிவுறுத்தி இருந்தார். ஆயினும் அதற்கு மாறாக சென்ற வாரம் 90 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து அந்த நியமனங்களை ரத்து செய்ய கோரி இருக்கின்றோம்.

ஓரே நேரத்தில் போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற அனைவரும் ஒரே நேரத்தில் பாடசாலையில் பொறுப்பேற்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை ஒரே நேரத்தில் பொறுப்பேற்றால் பாடசாலைக்கான நிர்வாக சேவை பயனுள்ளதாக அமையும்.

90 பேரும் தாங்கள் நியமனத்தை ரத்து செய்து அனைவருக்கும் ஓரே நேரத்தில் நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. மத்திய அரசும் வடக்கு மகாண முதலமைச்சரும் இணைந்து 398 பேருக்கும் ஓரே நேரத்தில் நியமனம் வழங்குமாறு கூறிய போதும் அதனை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கவனத்தில் கொள்ளாததை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இன்றைய தினம் செயலாளரின் பிரதிநிதிகளிடம் எமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். போட்டி பரீட்சைகளில் அதி கூடிய புள்ளிகளை பெற்றவர்கள் இருக்கின்ற பொழுதும் குறைந்த புள்ளிகளை பெற்றவர்களுக்கு அதிபர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பத்திரிகையில் விண்ணப்பம் கோரப்படாமல் நியமனங்களுக்கான போட்டி பரீட்சை நடாத்தப்பட்டது. இவ் நியமனத்தில் பொருத்தமான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் அரசியல் தலையீடுகள் உள்ளதாகவும் போட்டி பரீட்சையில் சித்தி பெற்ற அதிபர்களின் பிரதிநிதி குறிப்பிட்டார்.