மட்டு.கல்லடி பாலத்தில் வரலாறு காணாத மக்கள் வெள்ளம். கிழக்கு மாகாணம் அதிர்ந்தது.

511 0

வடக்கு மாகாணத்தை தொடர்ந்து கிழக்கு வாழ் மக்களும் அனைத்து பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்றைய தினம்(19.03.2019) மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் அலையென திரண்டெழுந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் இனைந்து அரசுக்கு எதிரான தமது உள்ளார்ந்த எதிர்ப்பினை தெரிவித்தது.
மட்டு.கல்லடி பாலத்தில் நீதிக்கான பேரெழுச்சிக்கு திரண்ட மக்கள் அரசுக்கு எதிரான பலவிதமான கோசங்களையும் கோரிக்கையினையும் கேட்டு முழக்கமிட்டனர்..
குறிப்பாக ஐ…நாவே அரசுக்கு கால அவகாசம் கொடுக்காதே..

ஓ.எம். பி.அலுவலகம் வேண்டாம்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு எங்கே நீதி..காலத்தை இழுத்தடித்து காலாவதி ஆக்காதே..எமது நிலம் எமக்கு வேண்டும்.இராணுவமே உன் கையில் ஓப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே போன்ற வாசகங்களை ஏந்தியும் குரல் கொடுத்தும் பேரணியில் கலந்து கொண்டனர்.
மட்டு கல்லடி பாலத்து நீதிக்கான பேரெழுச்சி பேரணிக்கு ஆதரவாக கிழக்கு மாகாணம் முழு அளவிலான கதவடைப்பை செய்ய வர்த்தக சங்கம் வேண்டுகோள்விடுத்திருத்து.அத்தோடு சகல பொது அமைப்புக்களும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவுத்திருந்த்து.
கிழக்கு நீதிக்காய் எழுவோம்.கதவடைப்பு போராட்டத்திற்கு வடக்கு மக்களும் பொது அமைப்புக்களும் தமது ஆதரவை தெரிவித்திருந்த்து.

வடக்கு மாகாணத்திலிதுந்து வலிந்து ஆக்கப்பட்ட உறவுகளின்.சங்கம்.. சிகை அலங்கார சங்கம். இன்னும் பல பொது அமைப்புக்களும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.

வடக்கு மாகாணத்திலிருந்து பலபொது அமைப்பு க்களின் ஒழுங்கமைப்புக்களுடம் மக்கள் கலந்து கொண்டனர்.
பேரணியின் முடிவை போராட்டத்தின் மகஜர் கையளித்தனர்.