வசந்த கரன்னாகொட மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜர்!

218 0

முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட இன்று மூன்றாவது முறையாகவும் குற்றப் புலானாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பாகவே இவரிடம் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவர் சி.ஐ.டியில். ஆஜராகியுள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி திங்கட்கிழமை  8 மணி நேரம் விசாரணை செய்த சி.ஐ.டி.யினர் 13 ஆம் திகதி  மீளவும் அவரை ஆறு மணி நேரம் விசாரித்து வக்கு மூலம் பெற்றனர்.

அதன்படி அத்மிரால் வசந்த கரன்னாகொடவிடம் குறித்த சம்பவம் தொடர்பில் 14 மணிநேர விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் மீள விசாரிக்க எதிர்பார்ப்பதாகவும் சி.ஐ.டி.யினர் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையிலேயே அவர் மீண்டும் இன்று காலை சி.ஐ.டி.யில் ஆஜராகியுள்ளார்.

கடந்த விசாரணைகளின் போது வசந்த கரன்னாகொடவிடம் 11 பேர் உள்ளடங்கும் இந்த ஐவரையும் கடத்தியமை மற்றும்  சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பில்  அறிந்திருந்தும் அதற்கு எதிராக செயற்படாமை தொடர்பில் விஷேடமாக விசாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.