காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

23 0

மட்டக்களப்பு – பதுளை வீதியை அண்டியுள்ள கார்மலை எனும் காட்டுப்புறப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் மாவடிவெம்பு காளிகோயில் வீதியை அண்டி வசித்து வந்த கிருஷ்ணபிள்ளை பஞ்சாயுதம் (வயது 50) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.