சாதாரணதர உயர்தர மாணவர்களுக்கு மென்பொருள் உருவாக்கம்

15 0

தேசிய உள்ளடக்க அபிவிருத்தி மையம் ஒன்றை நிறுவி அதன் மூலம் கலவி பொதுதராதர சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்களுக்கு மென்பொருள் உருவாக்கம் மேற்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி தேசிய உள்ளடக்க அபிவிருத்தி மையம் குளியாப்பிடியவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இதற்கென கொரிய அரசாங்கத்துடன்  35 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன்.  அடுத்த மாதம் அரம்பிக்கப்படவுள்ள இத் திட்டம் 02 வருட காலத்தில் பூர்த்தி செய்யப்படும்.