வீடொன்றிலிருந்து வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்பு!

20 0

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவேம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து வயோதிபரொருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை (16.03.2019)  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

மாவடிவேம்பு -2, சம்பந்தர் வீதியை அண்டி வசிக்கும் குமாரசாமி ராஜதுரை என்ற 67 வதுடையவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் சடலமொன்று காணப்படுதாக தங்களுக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேரச வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம்பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.