அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆபாச படங்களை நீக்க ‘பேஸ்புக்’ அதிரடி நடவடிக்கை

16 0

ஆபாச படங்களை நீக்க ‘ஏ.ஐ.’ என்று அழைக்கப்படுகிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

‘பேஸ்புக்’ சமூக வலைத்தளங்களில் சம்பந்தப்பட்ட நபர்களின் அனுமதியின்றி அவர்களது ஆபாச படங்கள், தகவல்கள், வீடியோக்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இவற்றையெல்லாம் அந்த சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இதற்காக ‘ஏ.ஐ.’ என்று அழைக்கப்படுகிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் முடிவு எடுத்துள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் உலக பாதுகாப்பு பிரிவின் தலைவர் ஆன்டிகான் டேவிஸ் கூறியதாவது:-

‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் (சம்பந்தப்பட்டவர்களின்) எந்தவித அனுமதியும் இன்றி ஆபாச படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். இவற்றை நீக்குவதற்கு புதிய தொழில் நுட்பங்கள் உதவும்.

அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, எங்கள் வலைத்தளத்தில் பகிர்ந்துகொள்ளப்படுகிற ஆபாச படங்கள், வீடியோக்கள் பற்றி புகார்கள் வருமுன்னரே மனித மதிப்பீட்டாளர்களின் மதிப்பீட்டுக்கு அனுப்பப்படும். யாரோ சிலரின் நெருக்கமான காட்சிகளை கொண்ட படங்களை வெளியிடுகிறபோது அது பேராபத்தை ஏற்படுத்தி விடுகிறது. எனவே அவற்றை நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீக்குவோம். முதலில் இதை சோதனைரீதியில் பயன்படுத்தி விட்டு, பின்னர் நெருக்கடி நேரத்தில் பயன்படுத்தத்தக்கதாக விரிவுபடுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Post

பிரட்டன் பிரதமரின் முதன்மை செயலாளர் டேமியன் கிரீன் ராஜினாமா

Posted by - December 21, 2017 0
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பிரட்டன் பிரதமர் தெரசா மேயின் முதன்மை செயலாளராக இருந்த டேமியன் கிரீன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

வழக்கு மேல் வழக்கு: ரத்து செய்யக்கோரி நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Posted by - January 31, 2018 0
தன் மீதான ஊழல் வழக்கில் மேலும் கூடுதல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு தடை கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம்…

ஐ.எஸ் தலைவன் அல் பக்தாதி உயிரோடு இருப்பதாகவே கருதுகிறோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலர்

Posted by - July 22, 2017 0
ரஷ்யாவால் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட ஐ.எஸ் தலைவன் அல் பக்தாதி உயிரோடு இருப்பதாகவே கருதுவதாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகனின் தலைவர் ஜிம் மேட்டீஸ் தெரிவித்துள்ளார்.

சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ்: ஆதாரத்தை வெளியிடப்போவதாக பிரான்ஸ் அறிவிப்பு

Posted by - April 20, 2017 0
சிரிய விஷவாயு தாக்குதலின் பின்னணியில் டமாஸ்கஸ் இருப்பதாகவும், அதற்கான ஆதாரத்தை விரைவில் வெளியிடப்போவதாகவும் பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.