அதிமுக – திமுக 8 தொகுதிகளில் நேரடி போட்டி: இரட்டை இலை – உதயசூரியன் 11 இடங்களில் மோதுகிறது

13 0

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-வும், திமுக-வும் தலா 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஆனால் 8 தொகுதிகளில் மட்டுமே இரண்டு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன. அந்த தொகுதிகள் விபரம் வருமாறு:-

1. சேலம் 2. பொள்ளாச்சி 3. திருவண்ணாமலை 4. நீலகிரி (தனி) 5. திருநெல்வேலி 6. மயிலாடுதுறை 7.காஞ்சிபுரம் (தனி) 8. தென்சென்னை

அதிமுக.வும், திமுகவும் 8 தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டாலும் இரட்டை இலை சின்னமும், உதயசூரியன் சின்னமும் நேரடியாக 11 இடங்களில் களத்தில் மோதுகின்றன.

பெரம்பலூர், நாமக்கல் ஆகிய 2 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது. இந்த 2 கட்சிகளும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறது. அதிமுக இந்த 2 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சி வேலூர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் நிற்கிறது. இங்கு திமுக போட்டியிடுகிறது.

இரட்டை இலை 21 தொகுதிகளிலும், உதயசூரியன் 23 தொகுதிகளிலும் (விழுப்புரம்) போட்டியிடுகிறது.

பாமக-வுக்கும், திமுக-வுக்கும் இடையே 6 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த தொகுதிகள் வருமாறு:-

மத்திய சென்னை, ஸ்ரீ பெரும்புதூர், அரக்கோணம், தர்மபுரி, திண்டுக்கல், கடலூர்.

விழுப்புரம் (தனி) தொகுதியில் பா.ம.க. – விடுதலை சிறுத்தைகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

பா.ஜனதா கன்னியாகுமரி, சிவகங்கை ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசுடனும், தூத்துக்குடியில் திமுகவுடனும், ராமநாதபுரத்தில் முஸ்லிம் லீக்குடனும், கோவையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியுடனும் மோதுகிறது.

தேமுதிக வடசென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளில் திமுகவுடனும் திருச்சி, விருதுநகர் ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசுடனும் மோதுகிறது.

தஞ்சாவூர் தொகுதியில் தமாகா-வுக்கும், திமுக-வுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

தென்காசி தொகுதியில் திமுகவும், புதிய தமிழகமும் நேரடியாக மோதுகிறது.

அதிமுக மதுரையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுடனும், நாகப்பட்டினத்தில் இந்திய கம்யூனிஸ்டுடனும் மோதுகிறது.

காங்கிரஸ் – அதிமுக இடையே 5 தொகுதிகளில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அதன்விபரம்:-

திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், தேனி,

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சிதம்பரம் (தனி), தொகுதியில் நிற்கிறார். அவரை எதிர்த்து அதிமுக போட்டியிடுகிறது.

ஈரோட்டில் அதிமுக-வுக்கும் மதிமுக-வுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

Related Post

தமிழக முதலமைச்சர் இன்று ஆளுநரை சந்திக்கிறார் – காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வாய்ப்பு

Posted by - April 30, 2018 0
தமிழக முதல்வர் இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேச உள்ளார். அப்போது காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது. 

திராவிட கட்சிகளின் ஆட்சி மாறினால் தான் மக்களுக்கு நிம்மதி: எச்.ராஜா

Posted by - January 26, 2018 0
திராவிட கட்சிகளின் ஆட்சி ஒழிந்தால் தான் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு தயராகும் தி.மு.க.: நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Posted by - February 1, 2018 0
உள்ளாட்சி தேர்தலுக்கு தயராகவும், கட்சியை வலுப்படுத்தவும் கோவை மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த இருக்கிறார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளை

Posted by - July 27, 2017 0
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா நாளையதினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ஆலய மரபின் படி,…

மாதவன் தூண்டுதலால் போலி வருமானவரி அதிகாரியாக நடித்தேன் – தீபா வீட்டில் நுழைந்த வாலிபர் வாக்குமூலம்

Posted by - February 12, 2018 0
தீபா வீட்டில் போலி வருமான வரித்துறை அதிகாரியாக நுழைந்த வாலிபர், மாதவன் தன்னை நடிக்க சொன்னதாக போலீசில் வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.