அதிமுக கூட்டணியின் தொகுதி உடன்பாடு: ஒதுக்கப்பட்ட தொகுதிகள் முழு விவரம்

10 0

அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் விவரங்களை துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று அறிவித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக-வுக்கு 5, தேமுதிக-வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமாகா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்ஆர் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை துணைமுதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ் இன்று அறிவித்தார்.

அதன்படி அதிமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:-

1. சேலம், 2. நாமக்கல், 3. கிருஷண்கிரி, 4. ஈரோடு, 5. கரூர், 6. திருப்பூர், 7. பொள்ளாச்சி, 8. ஆரணி, 9. திருவண்ணாமலை, 10. சிதம்பரம், 11. பெரம்பலூர், 12. தேனி, 13. மதுரை, 14. நீலகிரி, 15. திருநெல்வேலி, 16. நாகை, 17. மைலாடுதுறை, 18. திருவள்ளூர், 19. காஞ்சீபுரம், 20. சென்னை தெற்கு.

பாமக போட்டியிடும் தொகுதிகள்:-

1. தர்மபுரி, 2. விழுப்புரம், 3. அரக்கோணம், 4. கடலூர், 5. மத்திய சென்னை, 6. திண்டுக்கல், 7. ஸ்ரீபெரும்புதூர்

பா.ஜனதா போட்டியிடும் தொகுதிகள்:-

1. கன்னியாகுமரி, 2. சிவகங்கை, 3. கோவை, 4. ராமநாதபுரம், 5. தூத்துக்குடி

தேமுதிக போட்டியிடும் தொகுதிகள்:-

1. கள்ளக்குறிச்சி, 2. திருச்சி, 3. சென்னை வடக்கு, 4. விருதுநகர்.

என்ஆர் காங்கிரஸ் புதுச்சேரியிலும், தமாக தஞ்சாவூரிலும், புதியநீதிக்கட்சி வேலூரிலும், புதியதமிழகம் தென்காசியிலும் போட்டியிடுகின்றன.

Related Post

இலங்கை கடற்படையை கண்டித்து செல்போன் கோபுரத்தில் ஏறி வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம்

Posted by - March 7, 2017 0
மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து, செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதிமுக பொதுக்குழுவை கூட்டுபவர்கள் மீது சட்டநடவடிக்கை – டிடிவி தினகரன்

Posted by - September 2, 2017 0
அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டப்போவதாக அறிவித்தவர்கள் மற்றும் அதில் கலந்துக்கொள்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கபோவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதற்காக…

‘17–ந்திகதி என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பம்’ – தீபா

Posted by - January 9, 2017 0
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடங்கும் வரும் 17–ந்தேதி எனது அரசியல் பயணம் ஆரம்பம் ஆகும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.

மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

Posted by - May 4, 2017 0
மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதையடுத்து 3-வது நீதிபதி விசாரணைக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியீடு

Posted by - June 20, 2017 0
பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் ரேண்டம் எண்ணை வெளியிட்டார்.