விசாரணை நடத்தி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும்!

294 0

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொக்கைன் போதைப்பொருள் பாவனை செய்கின்றவர்கள் இருப்பதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்து வரும் கருத்து தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆளும், எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததுடன் ராஜாங்க அமைச்சர் தெரிவித்திருக்கும் விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர் டலஸ் அலகப்பெரும விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.