காணி உறுதிகளை ஒரே நாளில் பதிவு செய்யலாம்- வஜிர

279 0

காணிகளை துரிதமாக பதிவு செய்யும் சேவை எதிர்வரும் 16 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு பத்தரமுல்லை உள்ள பதிவாளர் நாயகத்தின் அலுவலகத்தில் ஆரம்பமாகவுள்ளது. 

இதற்கு அமைவாக இதே தினத்தில் 45 பிரதேச செயலகங்களில் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் போது காணி பதிவுக்கான ஒரு நாள் சேவையும் புதிய பாதுகாப்பு நடைமுறையின் கீழான திருமண மற்றும் மரண சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 16 ஆம் திகதி ஆரம்பிக்கபடுவதாக உள்ளக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். 

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் உரையாற்றினார். 

மார்ச் 16 ஆம் திகதி தொடக்கம் காணி உறுதிகளை ஒரே தினத்தில் பதிவு செய்வதற்கும் சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் இதன் போது குறிப்பிடப்பட்டது. 

இது வரை நிலவிய கால தாமதம் இந்த புதிய நடைமுறையின் கீழ் இனிமேல் இடம்பெறாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.