குறைந்த வசதிகளையுடைய பாடசாலைகளில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு மாகாண அரசியல்வாதிகளே பொறுப்பு!

7 0

குறைந்த வசதிகள் கொண்ட பாடசாலைகள் தேர்ந்தெடுக்க முடியாமல் போனமைக்கு தேர்வளவு விதிகளை பின்பற்றாத மாகாண அரசியல்வாதிகள் பொறுப்பு கூற வேண்டும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

ஒரு சில பாடசாலைகளில் மாணவர்கள் தென்னை ஓலைகளினால் ஆன குறைந்த வசதிகளை கொண்ட இடங்களில் கல்வி பயிலும் கவலையான செய்தி தனக்கு கிடைக்கபெற்றது. 

அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் ஊடாக குறைந்த வசதிகளை கொண்ட பாடசாலைகளை வசதிகள் கொண்டதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலைத்திட்டத்துக்கு பாடசாலைகளை தேர்தெடுக்கும் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட தேர்வளவு விதிகளின் அடிப்படையில் பாடசாலைகள் தேர்தெடுக்கப்பட்டன.

எனினும் ஒரு சில பிரதேச அரசியல்வாதிகளின் தலையீட்டினால் தேர்வளவு விதிமுறை  மீறப்பட்டமையினால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இது கவலைக்குரிய நிலைமையாகும்.

இந்த பிரச்சினைகள் தொடர்பாக மாகாண கல்வி பணிப்பாளர்களிடம் அறிக்கை கோரியுள்ளேன். இந்த நிலைமை தொடர்பில் எதிர்வரும் காலங்களில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Related Post

கடும் வறட்சி 35,000 குடும்பங்கள் பாதிப்பு

Posted by - September 27, 2016 0
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சியினால் கிழக்கு, வட மேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் 35,000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு மற்றும் தென்கடற்கரைப் பிரதேச மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு

Posted by - June 8, 2018 0
மண்ணெண்ணெய் விலையை குறைக்குமாறு கோரி நீர்கொழும்பு மற்றும் தென்கடற்கரைப் பிராந்தியத்தின் பிரதேச மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்வதைப் புறக்கணிகவுள்ளனர். இன்று தொடக்கம் கடற்றொழிலுக்கு செல்வதைப் புறக்கணிக்கவுள்ளதாக அகில இலங்கை…

சிறுவர்களை அரசியலில் ஈடுபடுத்துவதை கண்டால் 1929 இற்கு அறிவியுங்கள்- அதிகாரசபை

Posted by - February 5, 2018 0
அரசியல் விவகாரம் தொடர்பில் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டாம் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சகல அரசியல் கட்சிகளிடமும், சுயாதீனக் குழுக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. உள்ளுராட்சி சபைத்…

நாளை முதல் 48 மணி நேர நீர் விநியோக தடை

Posted by - July 16, 2018 0
மாத்தளை மாவட்டத்தில் பல இடங்களுக்கு நாளை (17) முதல் 48 மணித்தியாலங்கள் நீர் விநியோகத்தில் தடை ஏற்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை…

11 மீனவர்களுடன் மீன்பிடிப் படகு மாயம்

Posted by - August 20, 2018 0
அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்திலிருந்து, 11 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாக, அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். ஹிக்கடுவ கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, தாம்…