தொடர் விமான விபத்து – போயிங் நிறுவனம் மீது வழக்கு!

9 0

தொடர் விமான விபத்து காரணமாக இந்தோனேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் போயிங். இந்த நிறுவனம் தயாரித்த ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த 189 பேரும் பலியாகினர்.

இதே ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பியாவில் விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததை தொடர்ந்து சீனா மற்றும் எத்தியோப்பியா உடனடியாக அந்த ரக விமானங்களை இயக்க தடை விதித்தது.

அதனை தொடர்ந்து சிங்கப்பூர், நியூசிலாந்து, நார்வே, வியட்நாம், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட மேலும் பல நாடுகளும் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களுக்கு தடைவிதித்துள்ளன.

இந்த நிலையில், இந்தோனேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ நகர கோர்ட்டில் 35 வழக்குகளும், சியாட் நகர கோர்ட்டில் ஒரு வழக்கும் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Related Post

பாடசாலை மாணவர்கள் ஏழு பேரை சுட்டுக்கொன்ற இராணுவ வீரர் விடுதலை

Posted by - March 12, 2017 0
இஸ்ரேல் பாடசாலை மாணவர்கள் ஏழு பேரை சுட்டுக்கொன்ற ஜோர்தான் இராணுவ வீரர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜோர்தானின் உத்தியோகபூர்வ தகவல்களை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி…

பாகிஸ்தான் பிரதமராக இன்று பதவி ஏற்கிறார் இம்ரான்கான்!

Posted by - August 18, 2018 0
பாகிஸ்தான் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். 

மதீனாவில் தற்கொலை தாக்குதல்

Posted by - July 5, 2016 0
இஸ்லாமியர்களின் புனித நகரான சவுதி அரேபியாவின் மதீனாவில் தற்கொலைத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மதீனாவில் உள்ள புனித பள்ளிவாசலுக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது நான்கு…

விரதம் அனுஷ்ட்டிப்பது நல்லது – ஆய்வில் தகவல்

Posted by - February 27, 2017 0
விரதம் அனுஷ்ட்டிப்பதன் ஊடாக உடலை புத்தாக்கம் செய்ய முடியும் என்று அமெரிக்காவின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அத்துடன் விரதத்தின் ஊடாக குருதியின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும் என்றும்…

ஜப்பானில் அனல் காற்றுக்கு 65 பேர் பலி – தேசிய பேரிடராக அறிவிப்பு

Posted by - July 25, 2018 0
ஜப்பானில் நிகழும் கடும் வறுத்தெடுக்கும் வெயிலால் அனல் காற்றுக்கு 65 பேர் பலியாகி உள்ளனர். ஜப்பான் வானிலை ஆராய்ச்சி அமைப்பு இந்த அனல் காற்றை தேசிய பேரிடராக…