வங்காளதேசத்தில் விமான நிலையத்தில் கொசு தொல்லை!

15 0

வங்காளதேசத்தில் விமான நிலையத்தில் கொசு தொல்லை அதிகம் இருப்பதாக டாக்கா ஐகோர்ட்டில் தன்வீர் அகமது என்கிற வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளார். 

வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 கோடி வெளிநாட்டு பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து செல்கிறார்கள். இந்த விமான நிலையத்தில் கொசு தொல்லை அதிகம் இருப்பதாக பயணிகள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். இது பற்றி உள்ளூர் ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகின. 

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தன்வீர் அகமது என்கிற வக்கீல் டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி விமான போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறை செயலாளர் மற்றும் டாக்கா நகர மேயர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டனர். முன்னதாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணாத அதிகாரிகளின் அலட்சிய போக்கை கண்டித்த நீதிபதிகள், சர்வதேச விமான நிலையத்தில் கொசு தொல்லை இருப்பதாக கூறப்படுவது நாட்டின் மதிப்பை களங்கப்படுத்துகிறது என வேதனை தெரிவித்தனர். 

Related Post

பிரேசில் தேர்தலில் திடீர் திருப்பம் – முன்னாள் அதிபர் லுலா போட்டியில் இருந்து விலகல்

Posted by - September 13, 2018 0
மக்களின் ஆதரவைப் பெற்றுள்ள முன்னாள் அதிபர் லுலாவும் போட்டியில் இருந்து விலகி இருப்பது, பிரேசில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கனடா 150-வது பிறந்தநாள்: கலைகட்டிய கொண்டாட்டங்கள்

Posted by - July 2, 2017 0
கனடா நாட்டின் 150-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ துவங்கி வைத்தார். 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

ஜிம்பாப்வேயில் தொடரும் அரசியல் குழப்பம்: பதவி விலக அதிபர் முகாபே மறுப்பு

Posted by - November 20, 2017 0
ஜிம்பாப்வேயில் 37 ஆண்டுகளாக அதிபர் பதவியில் இருந்து வரும் ராபர்ட் முகாபே, ராஜினாமா செய்ய வேண்டும் என ஆளும்கட்சி 24 மணிநேர கெடு விதித்துள்ள நிலையில், அவர்…

சீனா: மக்கள் நெருக்கடி மிகுந்த சாலையில் வெடி விபத்து – 2 பேர் பலி

Posted by - July 21, 2017 0
சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் மக்கள் நெருக்கடி மிகுந்த சாலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 55 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவில் நடுவானில் சிறிய விமானங்கள் மோதல்

Posted by - September 1, 2016 0
அமெரிக்காவில் நடுவானில் இரண்டு குட்டி விமானங்கள் மோதிக் கொண்ட விபத்தில் அதில் பயணம் செய்த 5 பேரும் பலியானார்கள்.அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நடுவானில் பறந்த 2 குட்டி…