40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்று டெல்லியில் ராகுலை சந்திப்பேன் – முக ஸ்டாலின் சபதம்

14 0

பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ராகுல் காந்தியை டெல்லியில் சென்று சந்திப்பேன் எனும் நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

நாகர்கோவிலில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இன்னும் சில வாரங்களில் இந்தியாவின் பிரதமர் ராகுல் காந்திதான். உறுதியாக சொல்கிறேன். அதனால்தான் யாரும் சொல்வதற்கு முன் பிரதமர் வேட்பாளர் ராகுல்தான் என்று சொன்னேன்.

நரேந்திர மோடி பார்க்கக் கூடிய ஒரே வேலை அடிக்கல் நாட்டுவது தான். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 155 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அவரை இரும்பு  பிரதமர் என்கின்றனர். ஆனால் அவர் ‘அடிக்கல்’ பிரதமர் தான்.


பல ஆண்டுகளுக்கு பிறகு இவ்வளவு காலமாக இல்லாமல் பெருந்தலைவர் காமராஜர் நினைவு பிரதமர் மோடிக்கு இப்போது தான் வந்திருக்கிறது. பத்திரிகைகளில் இப்போது காமராஜர் படங்களுடன் அவரது விளம்பரங்கள் வெளிவருகின்றன. உங்களுக்காக ஓட்டுக் கேட்க உங்கள் கட்சி தலைவர்கள் படம் கிடைக்கவில்லையா?

தமிழ்நாட்டில் ஒரு பினாமி ஆட்சியை டெல்லியில் உள்ள பிஜேபி ஆட்சி நடத்தி வருகிறது. தமிழகத்தில் தற்போது நடப்பது வெறும் லஞ்சம், ஊழல் ஆட்சி மட்டுமல்ல, பெண்கள் எல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் ஆட்சியாக மாறிவிட்டது.
இந்த தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ராகுல் காந்தியை டெல்லியில் சென்று சந்திப்பேன் எனும் நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Post

கோவையில் கருணாநிதிக்கு புகழஞ்சலி கூட்டம்!

Posted by - August 26, 2018 0
கருணாநிதிக்கு கோவையில் புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு கருணாநிதியின் அரும்பணிகள் குறித்து பேசினார்கள்.

நாம் தமிழர் கட்சியினரை கைது செய்து சிறையில் அடைப்பதா?: சீமான் கண்டனம்

Posted by - November 10, 2017 0
ஒ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியினரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர்?

Posted by - July 23, 2016 0
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்படவுள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரத்தின் கோரிக்கையை  அடுத்து, இவர்களை விடுதலை…

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் டிரைவர்களின் உரிமத்தை ரத்து செய்ய தடை விதிக்க வேண்டும்

Posted by - July 23, 2017 0
அதிக பாரம் ஏற்றிச்செல்லும் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.