சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையே நீதிக்கான ஒரே வழி ஐ.நாவில் கஜேந்திரகுமார்.

628 0

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதானஅவையில் இடம்பெற்ற பொது விவாதத்தில் விடயம் 4ல் கலந்துகொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை இங்கு வருமாறு.

சர்தேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையே நீதிக்கான ஒரே வழி ஐ.நாவில் கஜேந்திரகுமார் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை
நாற்பதாவது கூட்டத்தொடர்
விடயம் 4 : பொதுவிவாதம்
உரையாற்றியவர்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இந்த அறிக்கையானது தமிழ்த் தேசியமக்கள் முன்னணியுடன் கூட்டிணைந்து வெளியிடப்பட்டது. மனித உரிமைமற்றும் சர்வதேசமனிதாபிமானசட்டங்கள் பாரியளவில் மீறப்பட்டமைக்கான, குற்றவியல் நீதிமற்றும் பொறுப்புக்கூறல் போன்றவையே, இந்தப் பேரவையில் நாடுகளைமையப்படுத்திய  2012ல் ஆரம்பித்து 30/1 மற்றும் 34\1 வரையிலான, சிறீலங்காமீதானதீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கானமிகப் பிரதானமான நியாயப்படுத்தலாக விளங்கியது.

ஆயினும், 30\1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டதிலிருந்து,அதற்கு இணை அனுசரணை வழங்கிய சிறீலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டதலைவர்களான ஜனாதிபதியும் பிரதமரும் குற்றவியல் நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிராகரித்துவருகிறார்கள். இன அழிப்பினால் பாதிக்கப்பட்டவர்களோ குற்றவியல் நீதியையும் பொறுப்புக்கூறலையும் கோரிநிற்க,  இந்தக் கூட்டத் தொடர் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், இனஅழிப்பினால் பாதிக்கப்பட்டதமிழ் மக்களுக்கு மத்தியில்  வடக்கில் உரையாற்றிய பிரதமரோமன்னிப்போம் மறப்போம் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

நாடுகளைமையப்படுத்தியசிறீலங்காமீதான இந்த தீர்மானங்களை நியாயப்படுத்துவதற்கான முக்கிய காரணிகளாக குற்றவியல் நீதியையும் பொறுப்புக்கூறலையும் தொடர்ச்சியாக சிறீலங்கா அரசு நிராகரித்து வருகின்ற நிலையில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையினால ;பாதிப்படைந்தமிகப் பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு,குற்றவியல் நீதியைவழங்க முடியாது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

தீர்மானத்தில் கூறப்பட்ட ஏனைய விடயங்களில் பெயரளவுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை முன்னேற்றங்களாக காண்பிப்பதும்,தாம் வழங்கியஉறுதிப்பாட்டைநிறைவேற்றாமல் காலத்தை இழுத்தடிப்பதும் சிறீலங்காஅரசின் நேர்மையற்றபண்பையும் கபடத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.

அதனடிப்படையில்,சிறீலங்காவைசர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்திற்குபரிந்துரைத்தல்  அல்லது சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயத்தை நிறுவுதலே பெருமளவில் பாதிக்கப்பட்டவர்களான தமிழ் மக்களுக்கு நீதிகிடைப்பதற்கான ஒரேயொரு வழிமுறையாகும் என்பதை நாம் மீளவும் வலியுறுத்திக் கூறுகின்றோம்.

நன்றி தாரகம்.