பிரித்தானியாவின் உதவி இலங்கைக்கு தொடர்ந்தும் கிடைக்கும்(படங்கள்)

334 0

britonஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய அரசாங்கம் விலகியுள்ள நிலையில், அந்த அரசாங்கத்தின் இலங்கையில் முன்னெடுக்கப்படும் நலத்திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன பிரதிநிதிகளுக்கும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை பிற்பகல் மாமாங்கத்தில் உள்ள மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளன காரியாலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் எஸ்.அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சம்மேளத்தின் உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், கல்வியியலாளர்கள், புத்திஜீவிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறை பொறுப்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு பிரித்தானிய நாட்டின் ஆதரவு மற்றும் கிழக்கு மாகாணத்தின் வர்த்தக நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் இருந்து பிரித்தானியாவுக்கு ஏற்றுமதிகளை ஊக்குவிப்பது குறித்தும் ஆராயப்பட்டதுடன் தரமான பொருட்களுக்கு பிரித்தானியா வரவேற்பளிப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த காலத்தில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டியெழுப்ப தேவையான உதவிகளை பிரித்தானியா தொடர்ந்து வழங்கும் எனவும் இங்கு அவர் உறுதியளித்தார்.

briton-2 briton-1 briton-3