உழைத்தவர்களை வாழ்த்துகின்றோம் – பேர்லின் மாநகர முதல்வர் Michael Müller

474 0


பேர்லின் மாநகரத்தில் பல்லின சமூகமாக  வாழ்ந்துவந்தாலும், தாம் வாழும் சமூகத்திற்கிடையில் பல்லாண்டு காலமாக சமூகத்தொண்டை ஆற்றி வரும் அமைப்புகளுக்கு நன்றி கூறும் முகமாக கடந்த மாதம் பேர்லின் மாநகர முதல்வர் Michael Müller அவர்கள் தனது காரியாலய மண்டபத்தில் காலை விருந்துடனான “உழைத்தவர்களை வாழ்த்துகின்றோம் ” எனும் கருப்பொருளுக்கு அமைய விழாவை முன்னெடுத்திருந்தார். இவ் விழாவில் பேர்லின் தமிழாலயத்தின் சார்பாக இளம் ஆசிரியர்கள் மற்றும் நகரப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாநகர முதல்வர் Michael Müller அவர்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டனர்.கடந்த ஆண்டுகளாக பேர்லின் வாழ் ஈழத்தமிழர்கள் தமது அடையாளத்தையும் , அறிமுகத்தையும் பல்லின சமூகத்திடம் சமூக இணைவாக்கத்தின் அடிப்படையில் வலுவாக கொண்டுசெல்வது குறிப்பிடத்தக்கது.