பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு 1938 ஐ அழையுங்கள்!

291 0

பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் இம்சைகளைக்  குறைக்கும் நோக்கில், புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “1938” என்ற இந்த  பெண்கள் உதவி தொலைபேசிச்  சேவை, தற்போது மீண்டும்  செயற்பட்டு வருவதாக, பெண்கள் உதவி மற்றும்  பாதுகாப்புச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

  பரந்தளவில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தொடர்பிலான  முறைப்பாடுகளைப் பொறுப்பேற்று,  அதற்குத் தேவையான தலையீடுகளைச் செய்வதே,  இச்சேவைப் பிரிவின் நோக்கமாகும்.

வாரத்தில் கடமை நாட்களில் காலை 8.30 மணி முதல் மாலை 5.15 மணி வரையிலும் இந்த உதவித்  தொலைபேசிச் சேவை தினமும்  செயற்பாட்டில் இருக்கும். 

இச்சேவையின் ஊடாக,  பெண்களுக்குத் தேவையான சட்ட ரீதியிலான  பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பெண்கள் உதவி மற்றும் பாதுகாப்புச் சேவைப் பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.