“நீதிமன்றங்களின் அமைதி” என்ற ஆவணப்படத்தை வெளியிடத் தடை

241 0

201608250915539530_engineering-college-student-murder-life-sentence-for-4_secvpfபிரசன்ன விதானகேயினால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தை திரையிடுவதற்கான தடையை கொழும்பு மாவட்ட நீதவான் எம்.யூ.குணசேகர பிறப்பித்துள்ளார்.

“நீதிமன்றங்களின் அமைதி” என்ற ஆவணப்படத்தை ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வரையில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நீதவான் லெனின் ரத்னாயக்க வழங்கிய கோரிக்கைக்கு அமையவே, கொழும்பு மாவட்ட நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த ஆவணப்படமானது நீதித்துறையை அவமானப்படுத்துவது போல் இருந்ததாக நீதவான் லெனின் ரத்னாயக்க கூறியுள்ளார்.

இந்த படம் பெண் நீதவவான் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதை அடிப்படையாக கொண்டதாக அமைந்துள்ளது.

உண்மையில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக லெனின் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த படம் நாளைய தினம் திரையரங்குகளில் திரையிட தயாராக இருந்தது. இந்நிலையில் குறித்த படம் திரையிடுவதை நிறுத்துமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.