வரவு – செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி -லொஹான் ரத்வத்த

714 0

அரசாங்கத்தின் இறுதி  வரவு – செலவு திட்டத்தை தோற்கடித்து    பாராளுமன்ற தேர்தலுக்கு செல்வோம். இவ்விடயத்தில் பொதுஜன பெரமுனவை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

 கண்டி நகரில்  நேற்று  ( வெள்ளிக்கிழமை ) இடம் பெற்ற  அரசாங்கத்திற்கு எதிராண பேரணியில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில்  நாட்டு மக்கள் கடுமையான அதிருப்தியினை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த காலங்களில் அறவிடப்பட்ட வட்டி வீதத்தினை  விட நூற்றுக்கு  21 சதவீதம்  வட்டி வீதம் ஒவ்வொரு   துறைகளிலும்  அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மக்களின்  வாழ்க்கை செலவுகளை குறைகளை குறைக்கும்  புதிய திட்டங்கள் ஏதும் குறிப்படப்படவில்லை.

 சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டம் வெற்றிப்  பெற்றால்  அதன் தாக்கம் அடுத்த அரசாங்கத்திற்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே இந்த வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்படுவது  உறுதியாக்கப்பட்டுள்ளது. 

 பாதீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்களுக்கு ஆளும் தரப்பினரும்  எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர். என்றார்.