போதைப்பொருள் கடத்தி வரப்படும் பிரதான கடல் மார்க்கம் கண்டுபிடிப்பு!

379 0

இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தி வரபப்டும் பிரதான கடல் மார்க்கத்தை கண்டுபிடித்துள்ளதாக முப்படைகளின் அலுவலக பிரதானி அட்மிரால் ரவீந்ர விஜேகுணரத்ன தெரிவித்தார்.

அத்துடன் கடல் மார்க்கமாக நாட்டுக்குள் போதைப்பொருள்  கொண்டுவரப்படுவதை தடுக்க சிறப்புத் திட்டங்கள் கடற்படையினர் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே யுத்ததின்போது புலிகளின் படகுகளை நடுக் கடலில் வைத்து அழித்தைப் போல் போதைப் பொருட்களைக் கடத்தும் படகுகளையும் அழிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பி‍லேயே அவர் இதை தெரிவித்தார்.

இராணுவ தளபதி லெப்டினன் கொமாண்டர் மகேஷ் சேனநாயக்க,கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் பியல் டி சில்வா, விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி உள்ளிட்டோர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.