பாராளுமன்ற வீதிக்கு தற்காலிகமாக பூட்டு

299 0

போராட்டம் ஒன்றின் காரணமாக பாராளுமன்ற வீதி தற்காலிக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

கிராம உத்தியோகத்தர்கள் இன்று சுகயீன விடுமுறை போராட்டமொன்றில் ஈடுபட்டு வருவதன் காரணத்தினால் குறித்த வீதி இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்த பாராளுமன்றம் வரையிலான வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனால் பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

17 கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபடுவதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கமல் கித்சிறி தெரிவித்துள்ளார். 

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட உள்ள நிலையில் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.