ஹம்ஸா பின் லேடனின் குடியுரிமை திரும்பப்பெற்றது சவூதி அரேபியா

345 0

பின்லேடன் மகனான ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமை, சவூதி அரேபியா அரசால் திரும்பப் பெறப்பட்டது.

அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி பின்லேடன்.  அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனாக செயல்பட்டு வந்த நிலையில், அமெரிக்க சிறப்பு படையால் பாகிஸ்தானில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்.  இவரது மகன் ஹம்சா பின்லேடன்.

பின்லேடன் மறைவுக்கு பின் அந்த இயக்கத்தின் தலைவராகும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார் ஹம்சா பின்லேடன்.  சமீபகாலமாக அல்-கொய்தா பயங்கரவாதிகளிடம் பெரும் செல்வாக்கை பெற்ற ஹம்சா பின்லேடன் அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்த தீட்டம் தீட்டிவருவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அமெரிக்கா ஹம்சா பின்லேடனை தீவிரமாக தேடி வருகிறது.

மேலும் ஹம்சா பின்லேடன், ஆப்கனிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான எல்லை பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்றும் ஈரான் நாட்டில் தஞ்சமடையலாம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஹம்ஸா பின்லேடனின் குடியுரிமை சவூதி அரேபியா அரசு திரும்பப் பெருவதாக நேற்று அறிவித்தது. முன்னதாக ஹம்ஸா பின்லேடன் பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.7 கோடி அளவிற்கு பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது குறிப்பிடத்தக்கது.