விபச்சாரவிடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் நால்வர் கைது

284 0

கல்கிஸை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் எனும் போர்வையில் இயங்கி வந்த இரு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டதில் இரு பெண்கள் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

கல்கிஸை ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவுக்கமையவே மேற்படி சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

26,32 வயதுடைய இரு இளைஞர்களும், 24, 29 வயதுடைய இரு பெண்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.