ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொடவை கைது செய்யமாட்டோம் என எந்த உறுதி மொழிகளையும் வழங்க முடியாது என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் விராஜ் தயாரத்ன, பிரதம நீதியரசர் நலின் பெரேராவுக்கு அறிவித்தார்.
தன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்வதை தடுத்து உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்திருந்தார்.
இந் நிலையிலேயே அம் மனு இன்று பிரதம நீதியர்சர் நலின் பெரேரா தலைமையில் நீதியர்சர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழு முன்னிலையிலேயே அம்மனு பரிசீலனைக்கு வந்தது.
இதன்போதே அத்மிரால் வசந்த கரன்னாகொடவை கைது செய்யமாட்டோம் என எந்த உறுதி மொழிகளையும் வழங்க முடியாது என சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் விராஜ் தயாரத்ன, பிரதம நீதியரசர் நலின் பெரேராவுக்கு அறிவித்தார்.
அத்துடன் மனு மீதான விசாரணையானது எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


