போராளிகளை விடுதலை செய்வதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை

306 0

sri-lanka-headline-news-mahinda-rajapaksa-news-today-650x433அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை விடுவிப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எனினும் அரசியல்வாதி என்ற ரீதியில் நீதிமன்ற விடயங்களில் தலையை நுழைப்பதற்கு நான் எதிரானவன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஊடகவியலாளர்களை நேற்று (03) சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நான் ஆட்சியில் இருந்தபோதும் புனர்வாழ்வுப் பெற்ற தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு முயற்சித்த போது நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு கைதிகளின் சட்டதரணிகள் கோரியதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுக்காமல் இருந்திருந்தால் இன்று பல அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டிருப்பர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நல்லாட்சியானது வடபகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பின்வாங்குவதாகவும், வடமாகாண முதலமைச்சரை தான் எப்போதும் இனவாதியாக பார்ப்பதில்லை என்றும் மஹிந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.