தமிழ் துரோகிகளோ எமது இனத்திற்கு துன்பமானவர்கள்!

95 0

”எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள்” என தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கூறியுள்ளார். எதிரிகளை அடையாளம் காணலாம் ஆனால் துரோகிகளை அடையாளம் காணப்பது என்பது மிக கடினமான விடயம்.

தமிழீழ விடுதலைப்போராட்டம் எதிரிகளுடன் இணைந்த துரோகிகளின் கூட்டால் முறியடிக்கப்பட்டது. இன்றுவரை மக்கள் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி ஒரு தசாப்த காலங்களாக அலைந்து களைத்து சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள்.

இன்று(25) ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகும் அதே வேளை இன்று(25) கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் பாரிய கவனயீர்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தை வழித்திச்சென்ற ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட முச்சக்கரவண்டியின் மின்சார இணைப்புகளை துண்டித்து போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த தமிழரசுக் கட்சியின் கரச்சி பிரதேச சபை உறுப்பினர் சத்தியானந்தன் உள்ளிட்ட சிலர் ஈடுபட்டனர்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை போராட்டத்திற்கு தலைமை தாங்கவோ , போராட்டத்தில் முன்னுக்கு நிற்கவோ ஏற்பாட்டாளர்கள் அனுமதிக்கவில்லை இதனால் ஆத்திரமடைந்த தமிழ் அரசியல் வாதி தனது நாட்டாமைத் தனத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளார்.

திடீரென கறுப்பு சட்டை அணிந்து வந்த சிலர், உறவுகள் கைகளில் ஏந்தியிருந்த பதாதைகளை மறைத்தவாறும் உறவுகளின் முன்பாக ஊடகவியலாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நின்று கோசங்களை எழுப்பி போராட்டத்தை குழப்பும் விதமாக செயற்பட்டனர்.

இதன் பின்னணியில் செயற்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் அநாகரீகமான வேலையால் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் உறவினர்கள் குறித்த அரசியல்வாதி மீது கடும் வெஞசினம் கொண்டுள்ளனர். ”சிங்களவனை விட மோசமான தமிழ் கூட்டமைப்பு நாட்டாமைகள் ” என மக்கள் திட்டி தமது ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளனர்.

தமிழினத்திற்கு சாபக்கேடு எப்போதும் ஐந்தாம் படையால் தான்.

Related Post

நல்லூரான் வீதியில் நீதிக்கு நடந்த அநீதி!

Posted by - July 22, 2017 0
13 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை யாழ்ப்பாண அரசின் தலைநகராக நல்லூர் விளங்கியது. நல்லூரின் கடைசி மன்னான சங்கிலி குமாரன் அந்நியரான போர்த்துக்கேயரின் ஆட்சியை…

திலீபனின் நினைவேந்தலில் பார்த்தீபனின் தாயாரால் ஈகச்சுடரேற்றல்!

Posted by - September 15, 2017 0
இன்று (15) தியாகி திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவு வணக்கம் நல்லூர் தெற்கு வீதியில் அமைந்துள்ள தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவுத் தூபி அமைந்திருந்த…

எமது தேசத்தின் ஒளிவிளக்கு பாலா அண்ணை!

Posted by - December 3, 2017 0
எமது தலைவர் அவர்களை நாம் எல்லோரும் “ அண்ணை“ என்று அன்போட அழைப்போம். ஆனால் எம் தலைவர் அவர்கள் குறிப்பிட்ட சிலரை “அண்ணை“  என அழைப்பது உண்டு.…

எது தமிழ்ப்புத்தாண்டு ——பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கம் என்னவென்றால்.

Posted by - April 14, 2017 0
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
 அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
 அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் 
தரணி ஆண்ட  தமிழனுக்கு 
தை முதல் நாளே தமிழ்ப்…

யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் ‘சர்வதேச அகிம்சா தினம்’ தேசியத்திற்கு எதிரான முயற்சி!

Posted by - September 29, 2016 0
யாழ்.இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் அகில இலங்கை காந்திசேவா சங்கம் இணைந்து ஏற்பாடு செய்து வரும் 02 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ள ‘சர்வதேச…