விக்னேஸ்வரனை உடன் கைது செய்யுங்கள் – தேரர் கோரிக்கை

316 0

vikki_ciவட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை உடன் கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விக்னேஸ்வரன் கடந்த தினத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பில் அவரை உடனடியாக கைது செய்யுமாறு சிங்கலே தேசிய முன்னணி, ரகசிய காவல்துறையினரிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளது.

முன்னணியின் தலைவர் அகுலகல்லே சிரிகினாந்த தேரர் இந்த முறைப்பாட்டை கையளித்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பௌத்த தேரர், வட மாகாண முதலமைச்சர் அரசியல் அமைப்பை மீறும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தேரர் குறிப்பிட்டார்.

இதனிடையே, வட மாகாண முதல்வர் சீ.வி. விக்னேஸ்வரன், வெளியிட்ட கருத்தை எந்தவகையிலும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.