தமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019

881 0

தமிழாலயங்களில் தமிழாக விதைத்ததின் விளைச்சல் கணிப்பு தாயகத்தில் வாழும் எம் தொப்பிள் கொடி உறவுகளே வியந்து பார்க்கும் நிலையில் யேர்மனியில் தமிழ் விளைந்து நிற்கிறது. நாடு முழுவதிலுமுள்ள நூற்றுக்கும் மேலான தமிழாலயப் பள்ளிகளில் தமிழ் மொழி பயிலும் மாணவரக்ளின் மொழித்திறனைக் கணிக்கும் வகையில் ஆண்டு தோறும் தமிழ்த்திறன்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

நிகழ்வில் முக்கிய விடயங்களாக வாசித்தல், உரையாற்றல், கவிதை, சொல்வதெழுதுதல், உறுப்பமைய எழுதுதல், கட்டுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, திருக்குறள் போன்றவற்றுக்கான திறன் கணிக்கப்படுகின்றது.

மூன்று நிலைகளில் போட்டிகள் வகுக்கப்பட்டுள்ன. தமிழாலய மட்டத்தில் முதல் நிலையாகவும், மாநில மட்டத்தில் இரண்டாம் நிலையாகவும் இறுதி நிலையாக நாடு தழுவிய மட்டத்தில் இறுதிப்போட்டியும் நடைபெறுகின்றது. இந்த வகையில் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஆரம்பமாகிய இப்போட்டிகளுக்கான இறுதி நிலைப் போட்டிகள் சென்ற 23.02.2019 கிறீபில்ட் நகரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகப் பொறிமுறை மரபுகளில் கனமேனும் பிசகாது சரியாக 09.30 மணிக்கு போட்டி நிகழ்வை தமிழ்த்திறன் போட்டிப்பிரிவின் பொறுப்பாளர் திரு. இராசதுரை மனோகரன் அவரக்ள் ஆரம்பித்து வைத்தார் ஆரம்ப நிகழ்வில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு.சிறிரவீந்திரநாதன் அவரக்ளுடன் மாநிலச் பொறுப்பாளரக்ள் மற்றும் துணை அமைப்புக்களின் பொறுப்பாளர்கள் சிறப்பாகக் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதிலிருந்தும் 500 போட்டியாளர்கள் 813 போட்டி நிகழ்வுகளில் கலந்து கொண்டார்கள். போட்டிகளை நடுநிலை தவறாது நடுவம் செய்வதற்கென சிறப்புப் பயிற்சியும் முதிர்ந்த அனுபவமும் பெற்ற 86 ஆசிரியர்கள் நடுவரக்ளாகப் பணியமர்த்தப்பட்டனர். விசேட போட்டிகளாக உரையாற்றல், கட்டுரை, வாசித்தல் நடைபெற்றது. உரையாற்றலுக்கான தலைப்பை உரியவரிடம் வழங்கி சில நிமிடங்கள் அத் தலைப்பை மையப்படுத்தி அவர் உரை நிகழ்த்த வேண்டும் இப் போட்டிகளில் மாணவரக்ள் மிகவும் ஆர்வமாக பங்குபற்றியிருந்தார்கள். இப் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு 29 ஆவது அகவை நிறைவு விழாவில் வைத்து விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்படுவர்.