புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வு கேள்விக்குறியே!

262 0

vickyபுதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வென்பது கேள்விக்குறியாகவே உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்துக்கு இன்று பயணம் செய்துள்ள நோர்வேயின் நிதியமமைச்சர் சைமனேட்டா சொமாருகாவைச் சந்தித்த முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து வடக்கு முதல்வர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

இதுவரைகாலமும் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அனைத்தும் பாகுபாடு காட்டியே வந்துள்ளன. இலங்கையில் 1948ஆம் ஆண்டு (பிரித்தானியர் காலத்தில்) நாம் அனைவரும் சமமாகவே நடாத்தப்பட்டோம். பரீட்சைகள் மற்றும் சகல போட்டிகளிலும் நாங்கள் சமனாகப் போட்டியிட்டோம்.

இருப்பினும், 1948ஆம் ஆண்டிற்குப் பின்னர் எமது நிலை மாற்றப்பட்டது. 1956ஆம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்படதன்பின்னர் இனப்பாகுபாடு பார்க்கப்பட்டது. இதனையடுத்து கல்வித் தரப்படுத்தல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து பல தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்தனர். இந்த நிலை இன்றுவரை தொடர்கின்றது.

இவ்வாறான பின்னணியில் கொண்டுவரப்படக்கூடிய அரசியலமைப்பானது தமிழ் மக்களுக்கு நன்மையளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உண்மையிலேயே பாகுபாடு காட்டாது அனைவரும் சமமாக மதிக்கப்படும் நிலையை பெரும்பான்மை இனத்தவர்கள் உறுதிப்படுத்தினால், அரசியல் அமைப்பினால் தமிழ் மக்களுக்கு நன்மை கிடைக்கும் எனத் தெரிவித்தார்.