தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினடிப்படையில் கடற்படையினர் மற்றும் திக்வெல்ல பொலிஸார் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பில் 120 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேநபர்கள் இருவரும் கோட்டிகொட மற்றும் திக்வெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக திக்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


