எந்த முறையிலும் தேர்தலுக்கு முகங்கொடுக்க ஐக்கிய தேசிய கட்சி தயாராக இருப்பதாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்.
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
அரசியல் செய்யும் போது எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்க தயாராக இருக்க வேண்டும் என்றும், மாகாண சபைத் தேர்தலுக்கு மாத்திரமன்றி ஜனாதிபதித் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் தாம் தயார் என்று அவர் கூறியுள்ளார்.


