பிரான்சு ஆர்யொந்தைப் பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு

377 0

பிரான்சில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று ( 02.10. 2016) ஞாயிற்றுக்கிழமை உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆர்யோந்தை தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழீழத் தேசியக் கொடியை பிரான்சு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திருமதி நிதி முகுந்தினி அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 07.09.2000 அன்று சாவகச்சேரிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலின் போது, சாவடைந்த வீரவேங்கை மலரினியின் தாயார்  ஏற்றிவைத்தார். தொடர்ந்து அகவணக்கம், மலர் வணக்கம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், பிரதம விருந்தினர்களாக பிரான்சு பாராளுமன்ற உறுப்பினர் திரு. பிலிப் துசே, மாநகரசபை முதல்வர் திரு. ஜோர்;ச் முத்ரோன் உட்பட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தபொதுமக்களின் மலர்வணக்கத்தைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின. எழுச்சி நடனங்கள், பேச்சு, கவிதை என்பவற்றுடன் பிரதிநிதிகளின்  சிறப்புரைகளும் இடம்பெற்றன.
ஆர்யோந்தை, கொலம்பஸ் ஆகிய தமிழ்ச்சோலை பாடசாலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள் இடம்பெற்றன.
அத்துடன் கடந்த 26.09.2016 திங்கட்கிழமை ஜெனிவா சென்ற தொடருந்தி;ல் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புப் குழுவினால் வெளியிட்டுவைக்கப்பட்ட நாம் சஞ்சிகை அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.
நிறைவாக ஆர்ஜொந்தை மாணவர்கள் பங்கு பற்றிய தியாக தீபம் திலீபன் தொடர்பான நாட்டுக்கூத்து அனைவரையும் கண்கலங்க வைத்தது.
நிறைவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு கண்டன.
(ஊடகப்பிரிவு  பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

firance3

france2

france4

france5

pirans-thileepan