ரஷியாவில் குடியிருப்பு பகுதிகளில் படையெடுக்கும் பனிக்கரடிகள்

1 0

ரஷியாவில் உணவை தேடி பனிக்கரடிகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளன.

ரஷியாவின் வடக்கு பகுதியில் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது நோவாயா செம்லியா தீவுக்கூடம். இந்த தீவுக்கூடத்தின் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் பனிக்கரடிகள் வசித்து வந்தன.

தற்போது அங்கு அதிக பனி காரணமாக மீன்கள் உள்ளிட்ட சில உயிரினங்கள் இடம் பெயர்ந்துவிட்டதால் உணவு கிடைக்காமல் பனிக்கரடிகள் தவிக்கின்றன. இதனால் உணவை தேடி பனிக்கரடிகள் கூட்டம் கூட்டமாக குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளன.

ஆர்க்கான்கெலஸ்க் பிராந்தியத்தில் உள்ள பெல்ஷியா குபா நகரில் 50-க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் சுற்றித் திரிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பனிக்கரடிகள் மிகவும் ஆபத்தானவை என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதோடு அங்கு அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், கரடிகளை விரட்டி அடிக்கவும் ராணுவவீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

Related Post

மெக்சிகோவில் 3 மாணவர்களை கொன்று அமிலத்தில் பிணம் மூழ்கடிப்பு

Posted by - April 25, 2018 0
மெக்சிகோவில் 3 மாணவர்களை கடத்தி கொலை செய்து உடல்களை அமில தொட்டியில் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘ரான்சம்வேர்’ரை தொடர்ந்து கம்ப்யூட்டரை அச்சுறுத்த வந்துள்ள அடுத்த வைரஸ்

Posted by - May 19, 2017 0
உலகமெங்கும் உள்ள தொழில்நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸை தொடர்ந்து ’உய்விஸ்’ என்ற மற்றொரு வைரஸ் தாக்குதலை நடத்த இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

தெரசா மே உடன் டிரம்ப் சந்திப்பு

Posted by - January 28, 2017 0
பிரிக்ஸிட் பிரிட்டனுக்கு அற்புதமானதாக இருக்கும் என பிரதமர் தெரசா மேவை சந்திந்த பிறகு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

Posted by - October 27, 2016 0
ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா மற்றும் ஆர்னியா செக்டார்களில் பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த உடன்படிக்கையை மீறி எல்லையில்…

ஊக்கமருந்து பாவனை குறித்து உசைன் போல்ட் கருத்து. 

Posted by - August 2, 2017 0
மெய்வல்லுனர்கள் மத்தியில் ஊக்கமருந்து பாவனை இல்லாது செய்யப்பட வேண்டும் என்று குறுந்தூர ஓட்ட வீரர் உசைன் போல்ட் தெரிவித்துள்ளார். அல்லாத பட்சத்தில் மெய்வல்லுனர் விளையாட்டுகள் அழிவடைந்துவிடும் என்றும்…

Leave a comment

Your email address will not be published.