மெக்சிகோவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலி

2 0

மெக்சிகோவில் பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். 

மெக்சிகோ நாட்டின் தலைநகர் மெக்சிகோ சிட்டியில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அதிசாபன் டி ஸரகோசா நகர் உள்ளது. இங்கு தனியாருக்கு சொந்தமான விமான பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நேற்று காலை இந்த பயிற்சி நிறுவனத்துக்கு சொந்தமான குட்டி விமானம் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. இதில் 2 பேர் இருந்தனர். 

விமானம் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதனை தொடர்ந்து விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related Post

சாம்சங் நிறுவன தலைவரிடம் மீண்டும் விசாரணை: விரைவில் கைதாகலாம் என தகவல்

Posted by - January 18, 2017 0
தென் கொரியா அதிபரின் நெருங்கிய தோழிக்கு லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சாம்சங் நிறுவன தலைவரிடம் இன்று அரசு வழக்கறிஞர்கள் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு

Posted by - June 29, 2018 0
அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள ‘தீ கேப்பிட்டல்’ என்னும் தனியார் செய்தி நிறுவனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இரசாயனத் தாக்குதல் குற்றச்சாட்டு

Posted by - September 22, 2016 0
ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க துரப்பினரை இலக்கு வைத்து, ஐ.எஸ். தீவிரவாதிகள் இரசாயனத் தாக்குதலை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ஈராக்கின்…

பாகிஸ்தானை போல யாரும் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுவது இல்லை – பாக். வெளியுறவு மந்திரி

Posted by - August 23, 2017 0
தீவிரவாத இயக்கங்களுக்கு உதவுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, பாகிஸ்தானை போல யாரும் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டது இல்லை என அந்நாட்டு வெளியுறவு…

நாடுகடத்தலுக்கு எதிரான வழக்கில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் குஸ்மான் தோல்வி

Posted by - October 21, 2016 0
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் குஸ்மான் எல் சாப்போவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த மெக்சிகோ நாட்டு நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Your email address will not be published.