தனித்தனி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க டுபாய் பொலிஸார் நடவடிக்கை

8118 122

டுபாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான மாக்கந்துர மதூஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் 16 பேரும் நேற்றைய தினம் துபாய் நேரப்படி பிற்பகல் டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதுடன், 16 சந்தேக நபர்கள் தொடர்பிலும் அந்நாட்டு பொலிஸார் தனித்தனியே விசாரணைகளை நடத்தி தனித்தனியான அறிக்கைகளை அங்குள்ள நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர். இதனால் அதற்கான தீர்ப்பை வழங்குவதில் நீதிபதிகளுக்கு போதியளவு காலம் தேவைப்படுமென்றும் பொலிஸ் விசேட செயலணியின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்த போதைப்பொருள் வர்த்தகர்களைக் கைது செய்வது தொடர்பில் எமது நாட்டுப் பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதிமன்றம் ஆகியன மேற்கொண்ட செயற்பாடுகள், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட சிவப்பு அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் தற்போது டுபாய் பொலிஸாருக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த அறிக்கைகள் அந்நாட்டு பொலிஸாரினால் டுபாய் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 

Leave a comment