புதிய அரசியலமைப்பால் இறையான்மைக்கு பாதிப்பு வராது-தலதா

4915 22

நாட்டின் ஒற்றையாட்சி, இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும்வகையில் அரசியலமைப்பை தயாரிக்க ஐக்கிய தேசிய கட்சி ஒருபோது முயற்சிக்கப்போவதில்லை என நீதி மற்றும் நிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

மேலும் புதிய அரசியலமைப்புக்கான  சட்டமூலம் கூட தயாரிக்கப்படாத நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் அது தொடர்பில் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். விகாரைகளுக்கு சென்று  தேரர்களிடமும் தெரிவிக்கின்றனர். அரசாங்கம் தொடர்பில் விமர்சிப்பதற்கு எதுவும் இல்லாத காரணத்தினாலே இல்லாத அரசியலமைப்பு தொடர்பாக தெரிவித்து வருகினறனர் எனவும் குறிப்பிட்டார்.

பலாங்கொடையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பி்ன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

Leave a comment