குடியிருப்பில் நீர் எடுக்கும் படையினர் ,குடிநீர் கிணறுகள் கெட்டுப்போவதாக மக்கள் விசனம்

346 0

முல்லைத்தீவு தண்ணீர்ஊற்று  கணுக்கேணி பகுதியில் மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள குழாய் கிணறு ஒன்றில் கடந்த பத்து வருடமாக இராணுவத்தினர் ஒவ்வொருநாளும் இலட்ஷக்கணக்கான லீட்டர் குடிநீரினை பல கனரக நீர்தாங்கிகள் மூலம் உறிஞ்சி வருவதனால் குறித்த பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் கிணறுகள் பழுதடைந்துவருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர் .

முல்லைத்தீவு மாவடடத்தில் உள்ள இராணுவ முகாம்கள் பலவற்றுக்கு குறித்த குழாய்கிணற்றிலிருந்தே கடந்த 10 வருடமாக படையினர் நீரை உற்ஞ்சிவருவதனால் நிலத்தடி நீர் வளம் கெடுவதனால்  பிரதேசத்தில் உள்ள மக்களின் கிணறு நீர் காவித்தன்மையாக மாறிவருவதோடு குடிநீருக்கு பாவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
 

கணுக்கேணியை பிரதிநிதித்துவ படுத்தும் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் இந்த சம்பவம் குறித்து பார்வையிடுவதற்கு குறித்த பகுதிக்கு ஊடகவியலாளர்களுடன் சென்ற  போது படையினர் பிரதேச சபை உறுப்பினருடனும் ஊடகவியலாளர்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த குடிநீரை உறிஞ்சும் கிணற்றுக்கு பாதுகாப்பாக அருகில் உள்ள மக்களின் காணியை பலாத்காரமாக அபகரித்து   காவலரண் ஒன்றை அமைத்துள்ள இராணுவம் பல்வேறு சுகாதர சீர்கேடுகளை ஏற்படுத்திவருகின்றது .குறித்த காணியில் படையினரின் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள மலசலகூடம் எந்தவித அனுமதியும் இன்றி பாதுகாப்பின்றி அமைக்கப்பட்டுள்ளது. மல கழிவுகள் மேலால் வழித்ந்து செல்கின்றது .

கழிவுநீரை சேமிக்கும் கிடங்கு மூடப்படவில்லை என்பதோடு ,டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில் அமைக்கப்ட்டுள்ளதோடு கழிவுநீரும் அகற்றப்படுவதில்லை .இவாறான சுகாதார சீர்கேடுகளை மக்கள் ஏற்படுத்தினால் சட்டத்தை கொண்டு நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள் இதனை கண்டு காணாததுபோல் விட்டுள்ளார்கள் .
இந்த குழாய்கிணரை படையினர் நீர் எடுப்பதற்காக இயந்திரங்களை  பயன்படுத்துவதால் அருகில் உள்ள வீடுகளில்  மாணவர்கள் கல்வி கற்பதற்கு இடையூறு ஏற்படுவதாகவும் அருகில் உள்ள வீடுகளின் நுழைவாயில்களை மறித்து படையினர்  வாகனகளை நிறுத்தி நீர் எடுப்பதால் தமது அன்றாட போக்குவரத்து பாதிப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமைகள் குறித்து இன்றையதினம் கரிதுரைபற்று பிரதேச சபை தவிசாளர் ,உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் குரித்த பகுதிக்கு நேரடியாக சென்றதனால் அவ்விடத்தில் படையினர் ,அரச புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டனர் .

உடனடியாக பொலிசாருக்கு இராணுவத்தினர் அறிவித்திருந்த நிலையில் அவ்விடத்துக்கு வந்த  முள்ளியவளை போலிஸ் அதிகாரி இது அரச நீர் இதனை இராணுவம் எடுக்கலாம் உங்களுக்கு என்ன பிரச்சனை என கேட்டதோடு இராணுவம் மக்களின் வாசல்களை மறித்து பொதுப்போக்குவரத்தையும் தடுக்கலாம் என தெரிவித்து விட்டு ஊடகவியலாளர்களையும் புகைப்படம் எடுத்துவிட்டு சென்றார் .
இந்த குடிநீரை படையினர் எடுப்பதுதொடர்பாக பல இடங்களிலும் மக்கள் முறையிட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் இராணுவத்தினர் இலட்சக்கணக்கான லீட்டர் குடிநீரை எடுத்துவருகின்றனர் .

Leave a comment