டுபாயில் கைதானவர்களில் 31 பேரின் இரத்தத்தில் கொக்கேன், 8 பேர் விடுதலை

316 0

டுபாயில் மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்டவர்களில் 31 பேரில் இரத்தத்தில் கொக்கேன் போதைப் பொருள் காணப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும், இவர்களை நாளை டுபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மதூஷுடன் கைது செய்யப்பட்டவர்களில் 8 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இவர்களின் இரத்தப் பரிசோதனை பெறுபேறுகளின் அடிப்படையில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

விடுதலை செய்யப்பட்டவர்களில் இரு பெண்கள் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

Leave a comment