புத்தளம் – கொழும்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

333 0

புத்தளம் கொழும்பு பிரதான வீதி தில்லையடி ரத்மல்யா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கெப் ரக வாகனத்தை முச்சக்கர வண்டி முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

கிளிநொச்சிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற லொறியுடன் பாலாவி ரத்மல்யாவிலிருந்து அரபா நகர் சென்ற முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளாகதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்பொழுது முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மதுபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் படுகாயங்களுக்குள்ளாகி புத்தளம்  ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர்  கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

இதன் போது லொறியின் சாரதியும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். 

Leave a comment