வெள்ளத்தை சாட்டாக வைத்து போலியான தகவல்களை வழங்கி நஷ்டஈடுகளைப்பெற முயற்சி-ஹரிசன்

363 0

வெள்ளத்தை சாட்டாக வைத்து போலியான தகவல்களை வழங்கி நஷ்டஈடுகளைப்பெற முயற்சிக்கின்றனர். அதனால் தான் நஷ்டஈடு வழங்குவதில் சில வேளைகளில் காலதாமதம் ஏற்படுகின்றது.

என்றாலும் வடக்கில் வெள்ளத்தில்  நெற் செய்கை அழிவடைந்த விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும். அத்துடன் நட்டஈடு கிடைகாதவர்கள் 14நாட்களுக்குள் முறைப்பாடு செய்யலாம் விவசாயம், கிராமிய பொருளாதாரம், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, நீர் முகாமைத்துவம், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அத்துடன் வடக்கு வெள்ளத்தினால் 1600 மாடுகள்,700 ஆடுகள்,5000 கோழிகள் உயிரிழந்துள்ளதாகவும் இவற்றின் பெறுமதி 55 மில்லியன் ரூபா எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுக்கான நஷ்ட ஈட்டை நாம் வழங்குவோம். என்றாலும் சிலர் வெள்ளத்தை காரணம் காட்டி  போலியான தகவல்களை வழங்கி நஷ்டஈடுகளைப்பெற முயற்சிக்கின்றனர். அதனால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கவேண்யிருப்பதால்தான் நஷ்டஈடு வழங்குவதில் சில வேளைகளில் காலதாமதம் ஏற்படுகின்றது என்றார்.

Leave a comment