முதலாளிமார் சம்மேளனத்துடனான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

5378 0

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் முதலாளிமார் சம்மேளனத்திற்கிடையில் இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தை நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
முதலாளிமார் சம்மேளன உயர் அதிகாரியொருவர் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாதென அறிவித்ததன் காரணமாக தொழில் அமைச்சர், நாளை வரை பேச்சுவார்த்தையை ஒத்தி வைப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு அறிவித்ததாக அதன் பிரதி தலைவர் அமைச்சர் இராதா கிருஷ்ணன் தெரிவித்தார். 

Leave a comment