மோசடிக்காரர்களின் பெயர்பட்டியல் இருந்தும் ஜனாதிபதி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – சுமந்திரன்

4812 0

பாரிய நிதிமோசடி குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு ஆதாரபூர்வமாக தகவல்களை முன்வைத்தும் குற்றவாளிகள் பெயர்கள் சுட்டிக்காட்டப்பட்டும் ஜனாதிபதியின் கைகளில் குற்றவாளியின் பெயர்கள் இருந்தும் கூட ஏன் இன்னும் அவர்கள் தண்டிக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார்.

பாரிய நிதி மோசடி மற்றும் மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை மீதான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து அது குறித்து உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

குற்றமிழைத்தவர் தண்டிக்கப்பட ஏன் இவ்வளவு கால தாமதம்? ஆணைக்குழு  தயாரித்த இந்த அறிக்கையின் பலன் என்ன ? களவுகளை கண்டறிய ஆணைக்குழு  அமைத்து ஆணைக்குழு  நேரத்தை கடத்த அரச நிதியை வீணடித்து இறுதியில் எந்த பலனும் இல்லையென்றால்  இவற்றை ஏன் நாம் செய்கின்றோம். குற்றச்சாட்டுக்கள் ஆதரங்களுடன் உள்ளன, பல குற்றங்கள் விசாரிக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் அறிக்கையாக ஜனாதிபதிக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. இப்போது இவற்றை குப்பைத்தொட்டியில் போடா முடியாது. 

Leave a comment